Monday, September 28, 2015

பெற்றெடுத்த குழந்தை, தாய்க்கு பாரமா?



ஹனும பீம மத்வ என்னும் மூன்று அவதாரங்களைப் பற்றிப் பேசும் இன்னொரு பாடல். தாசர்களில் மிகவும் முக்கியமானவர்களாகக் கருதப்படும் - நால்வரில் (ஸ்ரீபாதராயர், வியாசராயர், புரந்தரதாசர் & விஜயதாசர்) - விஜயதாசர் எழுதிய பாடல் இது.

ஹனும பீம மத்வர் ஆகியோர்களின் பெருமைகளைச் சொல்லி, இவ்வளவு பெருமைகளை உடையவனே, நான் என்ன குற்றம் செய்தேன்? ஏன் என்னை காப்பாற்ற மறுக்கின்றாய் என்று மன்றாடும் விஜயதாசரின் அருமையான பாடல் இது.

***

பாரவே பாரதி ரமணா, நினகே நான் (பாரவே)

பாரதிதேவியின் ரமணனே, உனக்கு நான் மிகவும் பாரமாக தெரிகிறேனா? (பாரவே)
(ஏன் என்னை காப்பாற்ற மறுக்கின்றாய்?)

லங்கா நாதன பிங்கவ முரிது
அகளங்க சரிதன கிங்கர நெனெசிதி
பங்கஜாக்‌ஷிகே அங்கிததுங்குர வித்தே
ஷங்கே இல்லதே நீ லங்கேயா தஹிசிதே (பாரவே)

லங்கா அரசனின் கர்வத்தைப் போக்கி
அவன் மகன் & முழு சேனையையும் அழித்தாய்
சீதைக்கு அடையாள முத்திரை கொடுத்தாய்
பயமில்லாமல், நீ இலங்கையை எரித்தாய் (பாரவே)

சோம குலதி நிஸ்ஸீம மஹிம நெனெசி
தாமஸ பகன நிர்தூமவ மாடிதே
காமினி மோஹிசே ப்ரேமதி சலஹிதே
தாமர சாக்‌ஷன ப்ரேமவ படெதே (பாரவே)

சோம குலத்தில் உதித்து
பகாசுரனை கொன்றாய்
ஹிடிம்பி என்னும் அரக்கி உன் மேல் ஆசைப்பட்டபோது, (வேதவியாசரின் ஆணைக்கேற்ப) அவளைத் திருமணம் செய்துகொண்டாய்
தாமரை மணாளன் (கண்ணணின்) பாசத்தைப் பெற்றாய் (பாரவே)

வேதவ்யாசர சேவெய மாடி
மோததிந்த பஹு வாதகளாடி
அதம சாஸ்திரகள ஹோமவ மாடி
விஜய விட்டலன சேவக நெனெசிதி  (பாரவே)

வேதவியாசருக்கு பூஜைகளை செய்து
பற்பல விவாதங்களை மேற்கொண்டு
மற்ற சாஸ்திரங்களுக்கு எதிராக வாதிட்டு, அவற்றை வென்று
விஜய விட்டலனின் சேவகன் என்று எப்போதும் எண்ணிக் கொண்பவனே, உனக்கு (பாரவே)

***





No comments: