Thursday, September 24, 2015

பாரதி தேவி.



பாரதி தேவி

ஸ்ரீமத்வர் நிறுவிய த்வைத சித்தாந்தத்தில் முக்கியமான கோட்பாடு - Hierarchy. கடவுளர்களிலிருந்து இந்த hierarchy, set செய்து வைத்துள்ளனர். அந்தப் பட்டியல் இங்கு உள்ளது.

https://dvaitavedanta.wordpress.com/2009/03/15/taratamya-of-sri-madhvacharya/

இந்த hierarchyல் மேலே, முதல் இடத்தில் ஸ்ரீமன் நாராயணன். அவனே சர்வோத்தமன். அனைத்திலும் / அனைவரிலும் உயர்ந்தவன். பிறகு வருபவர் ஸ்ரீலக்‌ஷ்மி. மூன்றாவது இடத்தில் வருபவர் பிரம்மா & வாயு பகவான்.
நான்காவது இடத்தில் இவர்களது மனைவிகள் - சரஸ்வதி & பாரதி தேவி.



இந்த பாரதி தேவியைப் பற்றிய பாடலே இன்று பார்க்கப் போவது. புரந்தரதாசர் பாடிய இது மிகவும் புகழ் பெற்ற பாடலாகும்.

இந்தப் பதிவுக்காக இவரின் படத்தைத் தேடலாம்னா, அஃபீஷியலான படமே எங்கும் கிடைக்கவில்லை என்பது ஆச்சரியமான விஷயம். பல இணைய குழுமங்களில் கேட்டும் பார்த்துட்டேன். ம்ஹூம். கிடைத்தால் மறுபடி பதிவிடுகிறேன். அதுவரை பாடலைப் பார்த்துவிடுவோம்.

***

பாரதி தேவிய நெனெ நெனெ
நிருத பகுதிகிது மனெ மனெ (பாரதி)

பாரதி தேவியை நினை மனமே
நிலையான பக்திக்கு இதுவே வழி வழி (பாரதி)

மாருதனர்தனாகி சுசரித கோமலாங்கி
சாரசாக்‌ஷி க்ருபாங்கி ஆபாங்கி (பாரதி)

மாருதனின் மனைவி நற்பண்புகளை உடைய இனிமையானவள்
தாமரை போன்ற கண்களை உடையவள், கருணையே உருவானவள் (பாரதி)

கிங்கிணி கிணிபாத பங்கஜ நூபுர
கன்கண குண்டித ஆங்க்ருத தேஹ (பாரதி)

கிங்கிணி என ஒலிக்கும் புனிதமான கொலுசு அணிந்தவள்
பளபளக்கும் ஆபரணங்களை உடலெங்கும் அணிந்தவள் (பாரதி)

சங்கர சுரவர வந்தித சரணே
கிங்கரி புரந்தரவிட்டலன கருணே (பாரதி)

சிவன் மற்றும் மற்ற கடவுளர்கள் இவளை வழிபடுவர்
இவள் புரந்தரவிட்டலனின் கருணையைப் பெற்றவள் (பாரதி)

***

திருமதி.சுதா ரகுனாதனின் குரலில் இந்தப் பாடல்:



***


No comments: