Monday, February 9, 2015

ரங்கனாதனின் சின்ன பாதங்கள்..

ரங்கனாதனின் சின்ன பாதங்கள்..

நம் வீட்டுப் பக்கத்தில் இருக்கும் வேங்கடேஸ்வர கோயிலில் ரங்கனாதரும் ஒரு சன்னிதியில் எழுந்தருளியிருக்கிறார். கோயிலின் இணையதளம் இங்கே. ரங்கனாதர் உயரம் 13.5அடி. பிரம்மாண்டமான அழகான உருவம். அவரைப் பார்க்கப் போகும்முன்னர், பிரகாரத்திலேயே, அவர் பாதங்களைப் பார்க்கும் விதமாக சுவற்றில் ஒரு ஜன்னலைப் போன்று ஏற்படுத்தியிருக்கின்றனர். இதன் வழியாக அவர் பாதங்களைப் பார்த்தபிறகு, சன்னிதியில் போய், கால்கள் இருக்கும் திசையிலிருந்து, தலை இருக்கும் திசை நோக்கி நகர்ந்து, அவர் அழகைப் பருகியவாறே, வெளியே வர மனமின்றி வருவோம்.

அந்த ரங்கனாதனின் பாதங்களில் (தங்கக் கவசத்தில்) பல்வேறு சின்னங்கள் இருக்கும். அவை என்னென்ன? உற்றுப் பார்த்தாலும் சரிவர புரியவில்லை. கூகுளில் தேடியதில் கிடைத்தது இந்தப் படம்.



ஆனால், ஸ்ரீபாதராயரின் இந்தப் பாடலைப் பார்த்ததும் அனைத்து சந்தேகங்களும் தீர்ந்தன. அந்தப் பாதங்களில் என்னென்ன இருக்கும்? அவரே சொல்கிறார் பாருங்கள். இவ்வளவு சிறப்பு மிக்க பாதங்களைக் கண்ட ஆனந்தத்தில் உருவாகியது இந்த புகழ்பெற்ற அவரது பாடல்.



***


இக்கோ நோடே ரங்கனாதன சிக்க பாதவ
சிக்கிதே ஸ்ரீ லக்‌ஷ்மி பதிய திவ்ய பாதவ (இக்கோ)

இங்கே பாருங்க ரங்கனாதனின் சின்ன பாதங்களை
(காணக்) கிடைத்தன ஸ்ரீ லக்‌ஷ்மிபதியின் திவ்யமான பாதங்கள் (இக்கோ)

சங்க சக்ர கதா பத்ம அங்கித பாதவ
அங்குச குலிஷ த்வஜா ரேகா அங்கித பாதவ
பங்கஜாசனன ஹ்ருதயதல்லி நலியுவ பாதவ
சங்கட ஹரண வேங்கடேசனன திவ்ய பாதவ (இக்கோ)

சங்க சக்ர கதா பத்ம ஆகியவை இருக்கும் பாதங்கள்
அங்குசம் கோடரி கொடி ரேகைகள் (அல்லது சூரியனின் ரேகைகள்) இருக்கும் பாதங்கள்
தாமரை ஆசனத்தில் வீற்றிருக்கும் லக்‌ஷ்மியின் இதயத்தில் இருக்கும் பாதங்கள்
கஷ்டங்களைப் போக்கும் வேங்கடேசனின் திவ்ய பாதங்களை (இக்கோ)

லலனே லக்‌ஷ்மி அங்கதல்லி நலியுவ பாதவ
ஜலஜாசனன அபீஷ்டவெல்ல சலிசுவ பாதவ
மல்லர கெலிது கம்சாசுரன கொந்த பாதவ
பலிய மெட்டி பாகிரதிய படெத பாதவ (இக்கோ)

(அவன்) மனைவியான லக்‌ஷ்மியின் ஒரு பாகமாக விளங்கும் பாதங்கள்
பிரம்மனின் விருப்பங்களை எல்லாம் நிறைவேற்றும் பாதங்கள்
மல்லர்களை வென்று கம்சனைக் கொன்ற பாதங்கள்
பலிச் சக்கரவர்த்தியை மிதித்து பாகிரதியை அடைந்த பாதங்களை (இக்கோ)

பண்டெய பாலெய மாடித உத்தண்ட பாதவ
பண்டியொளித்த சகடாசுரன ஒத்த பாதவ
அந்தஜ ஹனும புஜதொளுப்புவ அந்தத பாதவ
கண்டேவே ஸ்ரீ ரங்க விட்டலன திவ்ய பாதவ (இக்கோ)

பாறையை ஒரு அழகிய பெண்ணாக மாற்றிய அசாதாரணமான கால்கள்
வண்டியைத் தள்ளி சகடாசுரனைக் கொன்ற பாதங்கள்
அனுமனின் தோள்களில் ஏறும் கால்கள்
கண்டேனே ஸ்ரீ ரங்க விட்டலனின் திவ்யமான கால்களை (இக்கோ)

***

No comments: