Saturday, January 10, 2015

புத்திமதி சொன்னால் கேட்டுக் கொள்ளம்மா...



பக்தி, வைராக்கியம், வேத சாரங்கள், இறைவனின் பெருமைகள் இப்படி பலவற்றைப் பற்றி பாடியுள்ள புரந்தரதாசர், மனிதர்களுக்கு சில அறிவுரைப் பாடல்களையும் பாடியுள்ளார். அப்படிப்பட்ட ஒரு பாடல்தான் இது.


திருமணமாகி கணவன் வீட்டிற்குப் போகும் பெண்ணுக்கு அறிவுரை சொல்வதுபோல் அமைந்துள்ள இந்தப் பாடலை, பல வருடங்களாக பல்வேறு இடங்களில் கேட்டு வந்தாலும், இது நிஜமாகவே தாசர் பாடல்தானா? இப்படியெல்லாம்கூட அவர் பாடுவாரா? என்றெல்லாம் சந்தேகம் இருந்து வந்தது. ஹரிதாசர்களைப் பற்றி பல ஆராய்ச்சிகளை செய்து வரும், திரு அருளுமல்லிகே பார்த்தசாரதி அவர்களின் ‘தாசர்களின் 10,000 பாடல்கள் தொகுப்பில்’ இந்தப் பாடலைப் பார்த்தபிறகே அந்த சந்தேகம் தீர்ந்தது.

நீங்களும் இந்தப் பாடலைப் பார்த்து, கேட்டு மகிழவும். இந்த புத்திமதிகள் 500 ஆண்டுகளுக்கு முன் சொல்லப்பட்டவை. இந்த நூற்றாண்டுக்கும் இவை பொருந்துமா இல்லையா என்பதை உங்கள் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்.

***

புத்தி மாது ஹேளிதரெ கேளபேகம்மா
மனதி சுத்தளாகி கெண்டனுடனே பாளபேகம்மா (புத்தி)

புத்திமதி சொன்னால் கேட்க வேண்டுமம்மா
தூய்மையான மனதுடன் கணவனுடன் வாழ வேண்டுமம்மா (புத்தி)

அத்தே மாவகஞ்சி கொண்டு நடெயபேகம்மா
சித்ததொல்லபன அக்கரெயன்னு படெயபேகம்மா
ஹொத்து ஹொத்திகே மனெய கெலச மாடபேகம்மா
ஹத்து மந்தி ஒப்புவ ஹாகே நடெயபேகம்மா, மகளே (புத்தி)

மாமியார் & மாமனாருக்கு மரியாதை கொடுத்து நடக்க வேண்டுமம்மா
இறைவனின் கருணைக்குப் பாத்திரம் ஆகும்படி நடக்க வேண்டுமம்மா
வேளா வேளைக்கு வீட்டு வேலை செய்ய வேண்டுமம்மா
பத்து பேர் பாராட்டும்படி நடக்க வேண்டுமம்மா (புத்தி)

கொட்டு கொம்புவ நெண்டரொடனே த்வேஷ பேடம்மா
அட்டு உம்புவ காலதல்லி ஆட பேடம்மா
ஹட்டி பாகலல்லி பந்து நில்லபேடம்மா
கட்டி ஆளுவ கண்டனொடனே சிட்டு பேடம்மா, மகளே (புத்தி)

உறவினர்களிடம் சண்டை சச்சரவு வேண்டாம்மா
சாப்பிட்டு/வேலை செய்யும் நேரத்தில் (பகல் வேளைகளில்) வெளியில் விளையாட வேண்டாம்மா
வீட்டு வாசலில் வந்து நின்று பொழுதைப் போக்க வேண்டாம்மா
கணவனுடன் எப்போதும் கோபம் வேண்டாம்மா (புத்தி)

நெரெஹொரெதவரிகே நியாயவன்னு ஹேளபேடம்மா
கருவ கோப மத்சரவன்னு மாட பேடம்மா
பரர நிந்திப ஹெண்களொடனே சேர பேடம்மா
குரு புரந்தரவிட்டலன்ன மரெய பேடம்மா, மகளே (புத்தி)

அக்கம்பக்கத்து வீட்டார் சண்டையில் தலையிட வேண்டாம்மா
கர்வம், கோவம் ஆகியவற்றை விட்டு விடம்மா
மற்றவரை தூற்றும் பெண்களுடன் சேர வேண்டாம்மா
நம் குருவான புரந்தர விட்டலனை மறக்க வேண்டாம்மா (புத்தி)

***







1 comment:

maithriim said...

தாசர் சொல்லுக்கு அப்பீல் உண்டோ? அருமையான கருத்துக்கள் :-)

amas32