Tuesday, June 7, 2011

குரு பிரம்மா குரு விஷ்ணு.

***

குரு = ஆசிரியர்.

முந்தைய காலங்களில், வேத சாஸ்திரங்களை மாணவர்கள், குருகுல வாசம் செய்து படித்து வந்தனர். அதாவது, குருவின் வீட்டிலேயே தங்கி, அவருக்கு பணிவிடைகள் செய்து, அவர் சொல்லிக் கொடுப்பதை கற்று வந்தனர். தன்னலமில்லாமல் கற்றுக் கொடுக்கும் குருவை, தெய்வத்துக்கு ஒப்பிட்டு,

குரு பிரம்மா குருர் விஷ்ணு குரு தேவோ மகேஸ்வர:
குரு சாக்ஷாத் பரப்ரம்ம தஸ்மை ஸ்ரீ குருவே நம:


என்றும் சொல்லியிருக்கின்றனர்.

மாயாஜாலங்கள் எதுவும் செய்யாமல்; அந்த மாயாஜாலங்களை செய்யும் நாராயணனின் அருமை பெருமைகளை எடுத்துச் சொல்லும், பல்வேறு வித்யைகளை கற்றுக் கொடுப்பவரை குருவாக தேர்ந்தெடுத்தல் நலம்.

அப்படிப்பட்ட ஒரு நல்ல குருவை தேர்ந்தெடுத்து, அவரிடம் சரணடைந்து அனைத்தையும் கற்கும் பட்சத்தில், இதைவிட முக்திக்கு குறுக்குவழி எதுவும் கிடையாது என்று தாசர் சொல்கிறார்.

***

குருவின் முக்கியத்துவத்தை குறித்து பாடும் இந்த பாடலை பாடும்போது அவன் குருவைப் பற்றியும் சில வார்த்தைகள்.

பல வருடங்களுக்கு முன்னர், அவனுக்கும் ஒரு குரு கிடைத்தார். அதுவும் அவனாக தேடவில்லை. குருவாக தேடி அவனிடம் வந்தார். வேத, சாஸ்திரங்கள், ஜோசியம், வான் சாஸ்திரம், ஹரிதாஸ சாஹித்யங்கள், உபன்யாசம் ஆகிய எல்லாவற்றிலும் தேர்ச்சி பெற்ற பண்டிதர். ஒரு சமயம் அவருக்கு தவறுதலாக செய்யப்பட்ட கண் அறுவை சிகிச்சையினால், ஒரு வருடம் வரை கண் பார்வை பாதிக்கப்பட்டு அவதிப்பட்டார். அச்சமயம் அவனும் வேலையில்லாமல் (அப்பவுமா?) ச்சும்மா இருந்ததால், அவருடனே முழுவதும் இருந்து அவருக்கு சேவை செய்யும் பாக்கியத்தை அடைந்தான். அவர் மகன் / மகள்களைப் போல் அவனை அவரும், அவருடைய உறவினர்கள் அனைவரும் நடத்தினர். தற்போதும் அப்படியே.

அவருக்குத் தெரிந்த பற்பல விஷயங்களை தொடர்ந்து பல வருடங்களுக்கு, அவர் அவனுக்கு கற்றுத் தந்தார். அவன் எவ்வளவு கத்துக்கிட்டான்றது தனிக்கதை.

திருவல்லிக்கேணியில் வாழும் அவனது குருவிற்கு தற்போது 85 வயது.

ஸ்ரீ குருப்யோ நம:

***

குருவின குலாமனாகுவ தனகா
தொரயதண்ண முகுதி (குருவின)


குருவிற்கு அடிமையாய் ஆகாதவரை
கிடைக்காது முக்தி (குருவின)

பரிபரி ஷாஸ்த்ரவனேகவனோதி
வ்யர்தவாய்து பகுதி (குருவின)


விதவிதமான சாஸ்திரங்கள் பலவற்றை படித்தாலும்
வீணாகிப் போய்விடும் பக்தி (குருவின)

ஆறு ஷாஸ்த்ரவ ஓதிதரேனு
மூராறு புராணவ முகிசிதரேனு
சாரி சஜ்ஜனர சங்கவ மாடதே
தீரனாகி தான் மெரெதரேனு (குருவின)


ஆறு சாஸ்திரங்களை படித்தாலென்ன
(3x6) 18 புராணங்களை முடித்தாலென்ன
கற்று உணர்ந்த பெரியவர்களிடம் எதையும் கற்காமல்
கர்வத்துடன் எனக்கு எல்லாம் தெரியும் என்று சொன்னாலும் (குருவின)

கொரளலு மாலெய தரிசிதரேனு
கரதல்லி ஜபமணி எணிசிதரேனு
மருளனந்தெ ஷரீரக்கே லேபவா
ஒரசிகொண்டு தா திரிகிதரேனு (குருவின)


கழுத்தில் (துளசி) மாலை அணிந்தாலென்ன
கைகளில் ஜபமணி இருந்தாலென்ன
ஹரிதாஸனென்று உடம்பில் கோபிசந்தனத்தை
தரித்துக் கொண்டு சுற்றினாலும் (குருவின)

நாரியர சங்கவ அளிதரேனு
ஷரீரக்கே துக்கவ படிசிதரேனு
மரையண்ண ஸ்ரீ புரந்தர விட்டலன
மரெயதே மனதொளு பெரெயுவ தனகா (குருவின)


பெண்களை புறக்கணித்து சன்னியாசி ஆனாலென்ன
பட்டினி கிடந்து உடம்பை துக்கப் படுத்தினாலென்ன
ஸ்ரீ புரந்தரவிட்டலனை மறக்காமல்
மனதில் வைத்து நினைக்கும் வரை (குருவின)

***

வித்யாபூஷணர் அருமையாக பாடும் இந்தப் பாடல்:



***

6 comments:

Sudha said...

அந்த குட்டி கதையில் வரும் 'அவன்', 'நான் தான்' என்று கூறி கொள்ள பயமா என்ன?

இல்லை என்னிடமே 'நான் அவன் இல்லை' என்று கூற போகிறீர்கள?

குமரன் (Kumaran) said...

குருவின் பெருமையைக் கூறும் நல்லதொரு பாடல். நன்றி.

குருவே சரணம்.

Sivamjothi said...

குரு சாட்சாத் பரப்பிரம்மா
புண்ணியம் செய்யுங்கள்! தான தர்மம் செய்யுங்கள் ! எது புண்ணியம்!
குருவின் காணிக்கை கொடுக்க மறந்தேனோ?! குருவை வணங்க கூசி
நின்றேனோ!? மறுமுறை கண்ட வாசகத்தில் வள்ளல் பெருமான் உரைத்த
நீதி இது! குருவை பெறவேண்டும்! அதுவே புண்ணியம்! நல்ல சற்குருவை
பெற்று திருவடி உபதேசம் திருவடி தீட்சை பெற வேண்டும்! அவனே புண்ணியம் செய்தவன்!
http://sagakalvi.blogspot.in/2012/02/blog-post_20.html

sivadhasan said...
This comment has been removed by the author.
sivadhasan said...

யார் கூறினார்கள் என ஆராயகூடாது, என்ன கூறினார் என்று தான் பார்க்க வேண்டும்.யார் கூறினார் என ஆராய தொடங்கினால், என்ன செய்ய வேண்டும் என்பதை மறந்து விடுவீர்

Unknown said...

புண்ணியம் பூலோகத்தில்தான் செய்யவேண்டும்.